முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளுடன் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 எனவே, தலைநகர் கொழும்பு மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் ராணுவம் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கை வான் பகுதியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து