Idhayam Matrimony

இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

திங்கட்கிழமை, 13 மே 2019      உலகம்
Image Unavailable

Source: provided

 லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார்.  

இங்கிலாந்து நாட்டில் உள்ள டெர்க்ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் டிராண்ட் (வயது 47). இவரது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் (41). 2010-ம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார். 

அவரது உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த கொலை வழக்கு லண்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார். அதில், லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது.

உடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். இது மிகவும் கொடூரமானது. அவருக்கு குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து