முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வைகாசி மாத பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.  இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் வருகிற 19-ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
அதன் பிறகு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11-ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 12-ம் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 15-ம் தேதி திறக்கப்படும். 20-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து