லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்து: கரூர் அருகே 6 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      தமிழகம்
Karur Accident 2019 05 17

கரூர், கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள், உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேருக்கு மேர் மோதல்

கரூர் மாவட்டம் கீழ மாயனூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், தனது மனைவி, மகன், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் 8 பேருடன் இன்று காலை குலதெய்வம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அவர்களது கார் மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது, திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 2 ஆண் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

6 பேர் பலி

மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து