முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு சகஜம் - சுனில் அரோரா விளக்கம்

சனிக்கிழமை, 18 மே 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தேர்தல் ஆணையர்களுக்குள் கடந்த காலங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதால் அசோக் லவாசா தெரிவித்த கருத்து சகஜமானதுதான் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரியவந்தது. எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப் போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடந்த 4-ம் தேதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை.  அமித் ஷா மற்றும் பிரதமருக்கு எதிரான 11 நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு எனக்கு ஏற்புடையதல்ல. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக் கொள்ளவில்லை. எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி, எனது எதிர்ப்புகளும் பதிவு செய்யப்படாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று அசோக் லவாசா குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் நகலுடன் இந்த தகவல் ஊடகங்களில் வெளியான பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில் 13 விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்கு ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று நடத்தை விதிமீறல் தொடர்பானது. தேர்தல் கமிஷனில் ஆணையாளர்களாக பதவி வகிக்கும் மூன்று பேருமே மற்றவர்களின் குளோனிங் (நகல்) ஆக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்னரும் பல முறை சில விவகாரங்களில் ஆணையாளர்களுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்துள்ளன. இது போன்ற முரண்பாடுகள் இருக்கக் கூடியது, இருக்க வேண்டியதும்கூட. ஆனால், அவை அனைத்துமே தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து