நடிகர் கமல்ஹாசனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை நடத்த வி.எச்.பி.வலியுறுத்தல்

சனிக்கிழமை, 18 மே 2019      தமிழகம்
kamal 2019 05 09

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டுமென விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.ரவி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்குஅளித்த மனு விபரம்:-

அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் நடிகர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து, நாதுராம் கோட்சே என்று பேசியிருப்பது பெரும்பான்மை இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது மட்டுமில்லாமல் இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடிகர் கமல்ஹாசனின் வயோதிகத்தை கருத்தில் கொண்டும் சில அடிப்படையான மருத்துவ பரிசோதனை செய்யும்படியும் மனோதத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவர் கல்கி ராஜசேகரன் அளித்த மனுவில்,

இந்திய இறையாண்மையை பாதுகாத்திடவும் கலவர சூழ்நிலை ஏதும் ஏற்படாவண்ணம் தேர்தல் ஆணையம்மக்கள் நீதி மையத்தை தடை செய்யவும் அரவக்குறிச்சியில் அக்கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். நடிகர் கமல்ஹாசனின் வாக்குரிமையை வாழ்நாள் முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து