முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா காந்தியை போல மோடி தோற்க வேண்டும் - மாயாவதி

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ, இந்திரா காந்தியை போல பிரதமர் மோடியும் தோற்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவர் பாரதிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நடந்தது போல இப்போது வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏமாற்றி விட்டனர். கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர்.பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். 

குஜராத்தின் வளர்ச்சியை போல கிழக்கு உத்தரபிரதேசத்தின் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் தூண்டி விடுகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து