முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது முறையாக பிரதமர் ஆகும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து

வியாழக்கிழமை, 23 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. 

ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை விட அதிகளவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கூறியுள்ளதாவது:- 

பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகள். 2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து