பாராளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்.பி.க்கள் 76 பேர்

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
parliament 2018 3 6

புது டெல்லி, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்ல உள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் பா.ஜ.க. சார்பில் 47 பேரும், காங்கிரஸ் சார்பில் 54 பேரும், பகுஜன் சார்பில் 24 பேரும் போட்டியிட்டனர். இந்த பெண் வேட்பாளர்களில் பா.ஜ.க.வில் பிரக்யா சாத்வி, ஸ்மிருதி இராணி உட்பட 34 பேரும், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணி, மற்றும் சோனியா காந்தி ஆகியோரும், பகுஜன் சமாஜ் சார்பில் ஒரு வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சுயட்சையாக நின்ற 222 பெண் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த 41 பேர்களில் சோனியா காந்தி, ஹேம மாலினி உட்பட 28 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்ற கனிமொழி, தென்சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து