தொடர்ந்து 6 மணி நேரமாக பப்ஜி கேம் விளையாடிய மாணவன் மாரடைப்பால் மரணம்

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
Pubg game 2019 05 31

போபால், செல்போனில் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய மாணவன் ஒருவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இது வரை வெளிவந்த மொபைல் கேம்களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில் பப்ஜி விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது. இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது. கேம் விளையாடுவதை தடுத்தால் அவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டு விபரீதத்தில் முடிகிறது. இந்த கேம் பல உயிர்களை காவு வாங்கி உள்ளது.

அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில், தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய 12-ம் வகுப்பு மாணவன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பர்கான் குரேஷி தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகருக்கு வந்துள்ளார். பப்ஜி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட பர்கான் குரேஷி, கடந்த 28-ம் தேதி தனியாகச் சென்று செல்போனில் பப்ஜி கேம் விளையாடி உள்ளார்.

தொடர்ந்து 6 மணி நேரம் தீவிரமாக கேம் விளையாடிய பர்கான் குரேஷி, ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக கத்தியுள்ளர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. இதயத்தை துடிக்கச் செய்வதற்காக டாக்டர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மாணவன் குரேஷி பரிதாபமாக உயிரிழந்தார். பப்ஜி கேமால் தன் மகன் உயிரிழந்ததாக, அவரது தந்தை கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். இது பற்றி பெற்றோர் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படாததால் விசாரணை நடத்தப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வன்முறை எண்ணத்தை விதைக்கும் இந்த பப்ஜி கேமை, குஜராத்தின் சில நகரங்களில் காவல்துறை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து