ஆஸி.யின் தொடர் சாதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய அணி

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      விளையாட்டு
india end aus acheive 2019 06 10

லண்டன் : லண்டன் ஓவல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பல்வேறு சாதனைகளுக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா.

ஆஸி. தோல்வி...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 316 ரன்னில் ஆல்அவுட் ஆகி 36 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

சாதனைகள்

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் பல்வேறு சாதனைகளுக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்தியா.

1. உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா சேஸிங்கில் 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின் தொடர்ச்சியாக 19 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு தற்போது இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
2. இந்தியா 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. அதன்பின் தற்போது வீழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பை வரலாற்றில் இந்த வெற்றியோடு நான்குமுறை ஆஸ்திரேலியாவை சாய்த்துள்ளது.
3. ஆஸ்திரேலியா தொடர்ந்து 11 ஒருநாள் போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருந்தது. அதற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் எதிரணி வீரர்கள் சதம் கண்ட கடைசி ஐந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றிவாகை சூடி சதத்தை பயனற்றதாக்கியுள்ளது. அதை தவான் மாற்றி காட்டியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து