ஜெகன்மோகன் ரெட்டியுடன் நிகில் குமாரசாமி சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
Jeganmohan Reddy-Nikhil Kumarasamy 2019 06 11

அமராவதி : ஆந்திராவில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டியை, கர்நாடக முதல்வரின் மகன் நிகில் குமாரசாமி அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.  

ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திராவில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டியை, கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி அமராவதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார்.  ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த நிகில் குமாரசாமி, முதல்வராக பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து