பெசன்ட் நகர் சுடுகாட்டில் கிரேசி மோகன் உடல் தகனம்: திரையுலகம் கண்ணீர்ஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      சினிமா
Crazy-Mohan Cremation 2019 06 11

சென்னை : திடீர் மாரடைப்பில் மரணமடைந்த நகைச்சுவை நடிகரும், கதை-வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் உடல் நேற்று பகல் 11 மணியளவில் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

மயானத்தில் கமல்ஹாசனும், கிரேசி மோகன் குடும்பத்தினரும், நாடகக் குழுவினரும் திரண்டிருந்தனர். உடல், சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள் நாசர், சிவக்குமார், நகைச்சுவை நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, விவேக், கவுண்டமணி, வையாபுரி, மனோபாலா, தாமு, நகைச்சுவை நடிகை கோவை சரளா, கவிஞர் வைரமுத்து, நடிகைகள் கவுதமி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்தவர்கள் மறைந்த கிரேசி மோகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, கிரேசி மோகன் நாடகக் குழுவினர், சென்னை நகர சபாக்களின் நிர்வாகிகள், சென்னை நகர நாடகக் குழுக்களின் உறுப்பினர்கள் பெருமளவில் வந்து, மரியாதை செலுத்தினார்கள். அஞ்சலி நிகழ்ச்சி நேற்று காலை 9 மணியளவில் முடிவடைந்ததும், இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் கிரேசி மோகனின் உடல் மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் இருந்து வேனில் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னும் பின்னும் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் நாடகக் குழுவினரும், நண்பர்களும் சென்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து