12-ம் எண் பொறித்த ஜெர்சிக்கு விடை கொடுக்க வேண்டும் - பி.சி.சி.ஐ.க்கு காம்பிர் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      விளையாட்டு
Gambheer 2019 06 11

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியம் 12-ம் எண் பொறித்த ஜெர்சிக்கு விடை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

தூக்கிப்பிடித்தவர்...

இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் நான்காவது முதல் 6-வது இடத்திற்குள் களம் இறங்கி பேட்டிங் செய்யக்கூடியவர். வெளிநாட்டு மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சில் திணறிய போதெல்லாம் அணியை தூக்கிப்பிடித்தவர் இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் என்றால் அது மிகையாகாது.

பாராட்டுக்கள்...

இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையிலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் தொடர் நாயகன் விருது பெற்று அசத்தினார். இவர் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது முன்னாள் மற்றும் தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், இந்திய அணிக்காக அவர் செய்த சேவையை குறித்து பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடும் எதிர்ப்பு...

இந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேனும், தற்போதைய மக்களவை எம்.பி.யும் ஆன கவுதம் காம்பீர் 12-ம் எண் பொறித்த ஜெர்சிக்கு பிசிசிஐ கட்டாயம் விடை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் 10-ம் நம்பர் ஜெர்சி அணிந்து விளையாடினார். அவர் ஓய்வு பெற்ற பின்னர் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் 10-ம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

விடை கொடுக்க...

இதனால் பிசிசிஐ 10-ம் என் கொண்ட ஜெர்சிக்கு விடை கொடுத்துள்ளது. அதேபோல் யுவுராஜ் சிங்கை பாராட்டும் வகையில் 12-ம் எண் கொண்ட ஜெர்சியை யாருக்கும் வழங்காமல் விடை கொடுக்க வேண்டும் என்று கவுதம் காம்பிர் வலியுறுத்தி உள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து