முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவான் காயம்: இங்கிலாந்து செல்கிறார் ரிஷாப் பன்ட்!

புதன்கிழமை, 12 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஷிகர் தவான் காயம் அடைந்துள்ளதை அடுத்து, இளம் வீரர் ரிஷாப் பன்ட் இங்கிலாந்து செல்கிறார்.

கை பெருவிரலில்...

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் அபாரமாக சதமடித்தார். இந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலில் பலமாகத் தாக்கியது. வலியுடன் விளையாடிய தவான், 109 பந்தில் 117 ரன் குவித்தார். அந்த விரல் கடுமையாக வீங்கியதை அடுத்து, அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதில் ஜடேஜா பீல்டிங் செய்தார்.
இதனிடையே அவர் கை விரல் நேற்று ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. அவர் 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாகக் கூறப்பட்டது.

கண்காணிப்பில்...

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம், ஷிகர் தவான் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவித்தது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிரிக்கெட் வாரியம், “ தவான், பிசிசிஐயின் மருத்துவக் குழு கண்காணிப்பில் தற்போது உள்ளார். அவரை இங்கிலாந்தில் தொடர்ச்சியாக வைத்திருக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவர் காயத்தின் தன்மை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய அணி, அடுத்து மோத இருக்கும் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே தவான் ஆட மாட்டார் என்றும் அதற்குள் காயம் குணமாகி விட்டால், அடுத்து நடக்கும் போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

அணியில் ரிஷப் பந்த்...

இதற்கிடையே, மாற்று வீரராக, ரிஷாப் பன்ட்-டை கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்துக்கு அனுப்புகிறது. அவர் இன்று இங்கிலாந்து சென்றடைகிறார். ரிஷாப்பை அதிகார பூர்வ மாற்றுவீரராக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால், தவான் விரைவில் குணம் அடைந்தாலும் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாது. அணியில் உள்ள மற்ற வீரர் யாராவது காயமாகி வெளியேறினால் தான் அவரை அணியில் மீண்டும் சேர்க்க முடியும் என்பதால், ரிஷாப்பை மாற்று வீரராக அறிவிக்கவில்லை.

தொடக்க ஆட்டக்காரர்...

இதற்கிடையே, தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுலை, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நான்காவது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து