இந்தியா - பாக். போட்டி - அக்தர் ஆரூடம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      விளையாட்டு
Shoaib Akhtar 2019 06 15

2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற உள்ள 22-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை ஏதிர்கொள்கிறது. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பதால் இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்தும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் டுவிட்டரில் சுவாரசியமான செய்தியினை பதிவேற்றியுள்ளார். அக்தர் டுவிட்டரில் பதிவேற்றிய செய்தியாவது:-

இங்கிலாந்தில் தற்போது நிலவி வரும் வானிலை நிலவரம் காரணமாக வரும் ஞாயிற்றுகிழமை (ஜூன் 16) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் போட்டியில் மழை தான் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அக்தர் ட்டுவிட் செய்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து