உலகிலேயே மிகவும் அதிகபட்சமாக குவைத்தில் 145.4 டிகிரி வெயில் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      உலகம்
kuwait temperature 2019 06 16

துபாய் : உலகிலேயே மிகவும் அதிகப்பட்சமாக குவைத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை 145.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகபட்சமாக குவைத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை 145.4 டிகிரி வெயில் பதிவானது. ஆனால், பதிவான வெயிலைக் காட்டிலும் உணரப்பட்ட வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் சாலைகளில் தார் உருகிய நிலையில் காணப்பட்டது. மக்கள், வீடுகளில் முடங்கினர். போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின. நிழலான இடங்களில் கூட கடுமையான வெப்பநிலை உணரப்பட்டது. சவுதி அரேபியாவில், அல் மஜ்மா என்ற இடத்தில் 131 டிகிரி வெப்பம் நிலவியது.

குவைத், சவுதியில் வரும் 21-ம் தேதிதான் கோடைக்காலம் தொடங்குகிறது. அங்கு, கோடை முழுவதும் இதே வெப்பநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்சிலும் வெயில் கடுமையாக உள்ளது. எமிரேட்சில் பல இடங்களில் 118.4 டிகிரியும், ஈராக்கின் மேசன் பகுதியில் 132 டிகிரியும் வெப்பம் நிலவியது. இந்தாண்டு கோடைக்காலத்தில் வெயில் மிக கடுமையாக இருக்கும் என குவைத் வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். அடுத்த மாதம் வெயிலின் அளவு 154.4 டிகிரியை எட்டக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து