மிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் கல்லூரி மாணவி சுமன்ராவ் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      இந்தியா
miss india sumanrao 2019 06 16

மும்பை : 2019-ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவியான சுமன்ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019-ம் ஆண்டுக்கான மிஸ் இந்திய அழகி போட்டி நடந்து வந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து இளம் பெண்கள் பங்கேற்றனர். இதன் மிஸ் இந்தியா கிராண்ட் இறுதி சுற்று மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதி சுற்றுக்கு வந்த அழகிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் பதில் அளித்தனர். 

இதில் 2019-ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக ராஜஸ்தானை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியான சுமன்ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் சுமன்ராவ் பங்கேற்கிறார். 2-வது இடத்தை தெலுங்கானாவை சேர்ந்த சஞ்சனா விஜ் பெற்றார். மிஸ் கிராண்ட் இந்தியா பட்டத்தை சத்தீஷ்கரை சேர்ந்த ஷிவானி ஜாதவும், மிஸ் இந்தியா யுனைடெட் பட்டத்தை பீகாரை சேர்ந்த ஸ்ரேயா சங்கரும் வென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து