முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் இறால் மீன் வரத்து அதிகம்: கொள்முதல் வியாபாரிகள் வேண்டுகோளுக்குகிணங்க மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்.

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,-: ராமேசுவரம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு இறால் மீன்கள் அதிகமாக கிடைத்ததால் மீனகள் சேமித்து வைப்பதிலும்,ஊழியர் பற்றாக்குறையாலும் கொள்முதல் வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தம் செய்து உள்ளனர்.
  ராமேசுவரம் உள்பட தமிழக கடலோரப்பகுதியில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவோடு முடிந்தது.இதனையடுத்து ராமேசுவரம்  பகுதியிலிருந்து 685 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை இரவே மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்களை பிடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் கரை திரும்பி வந்தனர்.அப்போது தலா ஒவ்வொரு படகிற்கும் 500 கிலோ வரை  இறால் மீன்கள் கிடைத்திருந்தது.இந்த மீன்களை கொள்முதல் வியாபாரிகள் வெளிநாட்டிற்கு உணவுக்காக ஏற்றுமதி செய்து வருவதால் இந்த மீன்களுக்கு அதிக மவுசும்,எதிர்பார்ப்பும் இருக்கும்.இந்த நிலையில் இந்த மீன்கள்  எதிர்பாராதவிதமாக மீனவர்களுக்கு அதிகமாக கிடைத்ததால் இந்த மீன்களை வியாபாரிகள் வாங்கி சேமித்து வைப்பதில் பெரும் சிரமமான சூழ்நிலைகள் நிலவியது.மேலும் ஊழியர்கள் பற்றாக்குறைகளும்,குளிர்சாதன கட்டிகளும் அதாவது  (ஐஸ்கட்டிகள்) கிடைக்கவில்லை.ஆதலால் இன்றும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இறால் மீன்கள் அதிகமாக பிடித்து வந்தால் அனைத்து மீன்களும் சேதமடைந்துவிடும்.மேலும் மீனவர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படும்.ஆதலால் கொள்முதல் வியாபாரிகள் ஆலோசணைக்கிணங்க மீனவ சங்க நிர்வாகிகள் இன்று மட்டும் ஒரு நாள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என முடிவு செய்து வேலை நிறுத்தம் செய்தனர்.இதனால் 600 க்கும் மேற்பட்ட படகுகளை கடலில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தும் பணியில்  ஈடுபட்டனர். 
 இறால் மீன்களுக்கு போதிய விலையில்லாததால் மீனவர்களுக்கு ஏமாற்றம். 

சராசரி நாட்களில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் ஒரு படகிற்கு தலா 50 கிலோ முதல் 150 கிலோ வரை இறால் மீன்கள் கிடைக்கும்.அப்போது ஒரு கிலோ இறால் மீனுக்கு பெரிய,சிறியது என இனவாரியாக எடைக்கு தகுந்தமாரி பிரித்து  ரூ.400 முதல்  ரூ.600 வரை கிடைக்கும்.ஆனால்  60 நாட்கள் தடைக்காலம் முடிந்து நேற்றுக்கு முன் தினம் மீன்பிடிக்க சென்று நேற்று கரை திரும்பிய மீனவர்களின் ஒரு படகிற்கு தலா 500 கிலோ வரை இறால் மீன்கள் கிடைத்திருந்தது. இந்த நிலையில் கொள்முதல் வியாபாரிகளுக்கு ராமேசுவரம் பகுதியில் நேற்றும் மட்டும் ஏரத்தாலா 300 டன் எடை முதல் 400 டன் எடை வரை இறால் மீன்கள் கிடைத்திருந்தது.ஆதலால் வழக்கத்தைவிட இந்த மீன்களை கொள்முதல் வியாபாரிகள் ஒரு கிலோ  ரூ.300 முதல் ரூ.400 வரை வாங்கி சென்றதால் மீனவர்கள்  பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து