முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      ஆன்மிகம்
Image Unavailable

புகழ்ப்பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் இரண்டு வாரத்தில் லட்சக்கணக்கில் சில்லறையாக காணிக்கை வந்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் கோவில் நிர்வாகம் திணறியுள்ளது.

 
மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ளது சீரடி. இங்கு அனைத்து தரப்பு மக்களும் வழிபடும் புகழ்ப்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் புனிதமான, சிறப்பான கோவிலாக விளங்குகிறது. 

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் சாய்பாபாவை தரிசிக்க வருபவர்கள் காணிக்கை செலுத்துவதும் வழக்கமான ஒன்றுதான். இக்கோவில் இந்தியாவிலேயே அதிக காணிக்கைகள் வரும் கோவில்களில் ஒன்றாகும். கடந்த 2 வாரங்களில் சில்லறையாக மட்டும் ரூ.14 லட்சம் காணிக்கை வந்துள்ளது. 

இது குறித்து சீரடி சாய்பாபா கோவில் சி.இ.ஓ தீபக் முகலிகார் கூறுகையில், ‘கோவிலுக்கு வரும் காணிக்கைகளை வாரத்திற்கு 2 முறை எண்ணுகிறோம். ஒவ்வொரு முறையும் ரூ.2 கோடி அளவில் காணிக்கை செலுத்தப்பட்டிருக்கும். 

இதில் சில்லறையாக மட்டும் ரூ.14 லட்சம் வந்துள்ளது. இந்த கோவிலின் கணக்குகள் 8 வெவ்வேறு வங்கிகளில் உள்ளது. ஆனால், சில்லறைகளை ஏற்க வங்கிகள் மறுக்கின்றன.
இந்த சில்லறை காணிக்கைகளை என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவே, நாங்கள் இது குறித்து ரிசர்வ் வங்கியில் முறையீடு செய்ய உள்ளோம். அப்போதுதான் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும்’ என கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து