முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்: புதிய சாதனை படைத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மான்செஸ்டர் : ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளினார் மோர்கன்.

148 ரன்கள்...

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து கேப்டன் ருத்ர தாண்டவத்தால்தான் இவ்வளவு ரன்கள் குவிக்க முடிந்தது. அவர் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சர்களுடன் 148 ரன்கள் விளாசினார்.

சாதனை முறியடிப்பு...

17 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஹிட்மேன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 சிக்சர்களும், 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 16 சிக்சர்களும், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 16 சிக்சர்களும் விளாசியிருந்தனர். தற்போது மூன்று ஜாம்பவான்களின் சாதனையை மோர்கள் உடைத்தெறிந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து