வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை விரைவில் உருவாக வாய்ப்பு - தமிழகத்தில் வெப்பம் குறையும்: வானிலை மையம்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      தமிழகம்
Heat-wave-Tamil-Nadu 2019 05 07

சென்னை : வங்கக்கடல் வடக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை விரைவில் உருவாக வாய்ப்பிருப்பதால், தமிழகத்தில் வெப்பநிலை குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவானால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்றுவீசவும் வாய்ப்பு உண்டு. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் 11 மணி முதல் 4 மணி வரையில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. அதே போல, மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதி மாவட்டங்களான ஈரோடு, தேனி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு மற்றும் நாளை  இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையானது இன்று முதல் பல பகுதிகளில் குறைய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குன்னுார், பெரியகுளம் மற்றும் சின்னக்கல்லார் பகுதிகளில் 2 செ.மீ. வரை மழை பெய்துள்ளாதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து