கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த அனுமதி கோரிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டின் வேண்டுகோளை நிராகரித்தது பி.சி.சி.ஐ

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      விளையாட்டு
ACB 2019 06 20

புதுடெல்லி : ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் தொடரை இந்தியாவில் நடத்த அனுமதி தரவேண்டும் என்ற வேண்டுகோளை பிசிசிஐ நிராகரித்துள்ளது.

டேராடூனில்...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அதிக அளவில் உதவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், இந்தியாவில் உள்ள மைதானங்களை சொந்த மைதானங்களாக கருதுவதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இதனால் அயர்லாந்துக்கு எதிரான தொடரை ஆப்கானிஸ்தான் டேராடூனில் நடத்தியது.

நிராகரிப்பு...

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு டி20 கிரிக்கெட் லீக்கை நடத்தி வருகிறது. இதையும் இந்தியாவில் உள்ள மைதானங்களில் நடத்த அனுமதி தர வேண்டும் என ஆப்கானிஸ்தான் கேட்டிருந்தது. இந்நிலையில் நாங்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரை நடத்தி வருவதால், ஆலோசனை நடத்துவதற்கு உகந்தது அல்ல என பிசிசிஐ நிராகரித்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து