25 லீக் ஆட்டங்கள் நிறைவு: உலகக்கோப்பை அரை இறுதிக்கு தகுதிபெற 4 அணிகளுக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      விளையாட்டு
WC semifinals 2019 06 20

லண்டன் : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்க நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்றே தெரிகிறது.

தென்ஆப்பிரிக்கா...

உலககோப்பை போட்டியில் 25 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 20 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தற்போதுள்ள புள்ளி விவரப்படி தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டன. முதல் 4 இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளன.அதேநேரத்தில் 4-வது அணியாக தகுதி பெறும் போட்டியில் வங்காளதேசம், பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் உள்ளன.

அணிகள் குறித்து ஒருபார்வை...

நியூசிலாந்து:

9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தோல்வியை சந்திக்காத அணி. வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் மோதவேண்டி உள்ளது. இந்த ஆட்டங்கள் சவாலானது.

இங்கிலாந்து:

வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இங்கிலாந்து அணி பாகிஸ்தானிடம் மற்றும் தோற்றுள்ளது. 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இன்னும் 4 ஆட்டத்தில் விளையாடவேண்டி உள்ளது. முதல் 2 இடங்களை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா:

4 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இந்தியாவிடம் தோற்று இருந்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், தென்ஆப்பிரிக்காவுடன் மோத வேண்டியுள்ளது. அரை இறுதியில் நுழைவதற்கான வாய்ப்பில் நெருங்கிவிட்டது.

இந்தியா:

தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. நியூசிலாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்தானது. ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இங்கிலாந்தை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.

வங்காளதேசம்:

5 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோதும் ஆட்டம் சவாலானது. இந்த ஆட்டங்களின் வெற்றியை பொறுத்து அந்த அணி அரைஇறுதியில் நுழையும் நிலையில் உள்ளது.

இலங்கை:

5 ஆட்டத்தில் விளையாடி 4 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணிக்கு இனிவரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றது. நிகர ரன்ரேட்டில் பின்தங்கி இருப்பதால் முன்னேற்றம் காண்பது சவாலானது.

வெஸ்ட்இண்டீஸ்:

தொடக்கம் அபாரமாக இருந்தது. போகபோக மோசமான ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தியது. இந்தியா, நியூசிலாந்து அணிகளை கண்டிப்பாக வீழ்த்தவேண்டிய கட்டாயம் உள்ளது.

தென்ஆப்பிரிக்கா:

6 ஆட்டத்தில் 4 தோல்வியை தழுவியதால் அந்த அணி கிட்டத்தட்ட வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்கள் அந்த அணிக்கு சம்பிரதாயமாக இருக்கும். இந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று அந்த அணி கவுரவமான இடத்தை பிடிக்க முயற்சிக்கும்.

பாகிஸ்தான்:

5 போட்டியில் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. வெற்றி பெற்றாலும் அந்த அணியின் ரன்ரேட் மோசமான நிலையில் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான்:

புள்ளிகள் எதுவும் பெறாமல் தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்றது. அரைஇறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. ஒரு ஆட்டத்திலாவது வெல்ல வேண்டும் என்பது அந்த அணியின் இலக்காக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து