முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்த ஐகோர்ட் கிளை: இயக்குனர் ரஞ்சித் கைதாவாரா?

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      சினிமா
Image Unavailable

இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் பா. ரஞ்சித் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னர் ராஜராஜசோழனின் ஆட்சிக் காலம் இருண்ட காலம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கியது என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார். இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் கருத்து குறித்து திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ஐகோர்ட்  மதுரைக் கிளையில் பா.ரஞ்சித் மனுத் தாக்கல் செய்து இருந்தார். பா.ரஞ்சித்தின் ஜாமீன் மனு, நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி, முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால் அதனை சரிசெய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை ஜுன் 21-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்திருந்தார். அதுவரை பா.ரஞ்சித் மீது எவ்வித கைது நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதித்த தடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார். தடையை நீட்டிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை மறுத்து உள்ளதால் பா.ரஞ்சித் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து