சீனாவில் நிலநடுக்கம்: 5.4 ரிக்டராக பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      உலகம்
china earthquake 2019 06 23

பெய்ஜிங் : சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 19 பேர் காயமடைந்து உள்ளனர்.

சீனாவின் தென்மேற்கே சிச்சுவானில் காங்சியான் கவுண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.4 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இந்நிலையில் சீன அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நிலநடுக்கத்திற்கு காயமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 11 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை சிச்சுவானின் சாங்னிங் கவுண்டி பகுதியில் 6.0 என்ற அளவிலும், காங் கவுண்டி பகுதியில் 5.1 என்ற அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் 13 பேர் வரை கொல்லப்பட்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து