ஜாஸ் பட்லர் போல மிரட்டினார்: ஹரிஸ் சோஹைலுக்கு பாக். கேப்டன் சர்பிராஸ் பாராட்டு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      விளையாட்டு
Pak Captain 2019 06 24

லார்ட்ஸ் : ஹரிஸ் சோஹைல் ஆடிய விதம், ஜாஸ் பட்லரின் அதிரடி போல இருந்தது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது தெரிவித்தார்.

அரையிறுதி வாய்ப்பு...

உலகக் கோப்பை தொடரில் நடந்த 30-வது லீக் போட்டியில், பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, ஹரிஸ் சோஹைலின் அதிரடியால் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை சேர்த்தது. சோஹைல் 59 பந்தில் 89 ரன் குவித்தார். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை மட்டுமே சேர்த்து தோல் வியை தழுவியது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்து, தென்னாப்பிரிக்க அணி வெளியேறுகிறது. பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.

தொடக்க ஆட்டக்காரர்கள்...

வெற்றிக்குப் பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது, ‘’இந்த வெற்றிக்கு அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் காரணம். எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களை அடுத்து பாபர் அஸாம் அந்த பங்களிப் பை எடுத்தார். பின்னர் ஹரிஸ் சோஹைல் மிரட்டினார். கடந்த சில போட்டிகளில் வேறு காம்பினேஷுடன் விளையாடினோம். இந்த போட்டியில் அதை மாற்றி ஹரிஸ் சோஹலை கொண்டு வந்தோம்.

ஜாஸ் பட்லரை போல்...

இந்தப் போட்டியில் அவர் ஆடிய விதம், ரன் பசியில் அவர் இருந்ததை காட்டியது. போட்டி திருப்புமுனையாக அமைந்ததற்கு அவர்தான் முக்கிய காரணம். கடைசி 15 ஓவர்களில் அவர் ஆடிய விதம், இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரை நினைவுபடுத்தியது. அவரை போல அதிரடியில் மிரட்டினார். பீல்டிங் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டும் பல கேட்ச்களை கோட்டை விட்டோம். ஆமிர் சிறப்பாகப் பந்துவீசி, ஆரம்பத்திலேயே விக்கெட் வீழ்த்தினார். மிடில் ஓவர்களில் சதாப் நன்றாக பந்துவீசி விக்கெட்டை சாய்த்தார்’’ என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து