இந்தியா, இங்கிலாந்து, ஆஸி. அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் - ஆஸி. முன்னாள் வீரர் கிளார்க் கணிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      விளையாட்டு
clarke 2019 06 25

லண்டன் : இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸி. அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

பும்ராவுக்கு பாராட்டு...

2015 உலகக் கோப்பை பட்டத்தை வென்ற மைக்கேல் கிளார்க் கூறியதாவது., நடப்பு உலகக் கோப்பையை இந்தியா வெல்ல பும்ராவின் அற்புத பந்துவீச்சு மிகவும் உதவியாக இருக்கும். பும்ரா முழு உடல்தகுதியுடன் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவரது வளர்ச்சி சீராக உள்ளது.

புதிய பந்தை ஸ்விங் செய்யவும், வேகமாகவும் வீசும் திறன் பும்ராவுக்கு உள்ளது. மிடில் ஓவர்களில் மேலும் கூடுதல் வேகத்துடன் வீசுகிறார். கடைசி ஓவர்களில் அவர் வீசும் யார்க்கர்கள், ரிவர்ஸ் ஸ்விங் போன்றவை எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக உள்ளன.

குறும்பான வீரர்...

ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆட்டம் அவருக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. வார்னர் ஆஸி.யின் குறும்பான ஆட்டக்காரராக திகழ்கிறார். இந்த உலகக் கோப்பையை ஆஸி. வென்றால் வார்னர் தான் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சிறப்பை பெறுவார். வார்னர் சிறந்த பார்மில் உள்ளது மகிழ்ச்சி தருகிறது. வார்னர் இரு முறை 150 ரன்களை விளாசியுள்ளார். இதுவே அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதின் அடையாளம்.

கோலியின் பண்பு...

விராட் கோலியின் தலைமைப் பண்பு சிறப்பாக உள்ளது. 2 சுழற்பந்து வீச்சாளர்களை அவர் பயன்படுத்துவது சிறந்த உத்தியாகும். இந்திய அணி தற்போது நம்ப முடியாத வகையில் ஆடி வருகிறது. ஆரோன் பின்ச் சிறந்த பார்மில் உள்ளதும், ஆஸி. அணிக்கு கூடுதல் வலிவை தந்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 3 நாடுகளில் ஒன்று தான் கோப்பை வெல்லும் வாய்ப்புள்ளது என்றார் கிளார்க்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து