ஆசியாவுக்கு வெளியே அதிக வெற்றி: கேப்டனாக விராட் கோலி சாதனை

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      விளையாட்டு
virat kohli interview 2019 02 25

Source: provided

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வெற்றியின் மூலம் ஆசியாவுக்கு வெளியே தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

10 வெற்றிகள்...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதன் மூலம் 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.  இந்த வெற்றியின் மூலம் ஆசியாவுக்கு (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம்) வெளியே தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்தியாவுக்கு வெளியே தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து