சுறாக்கள் தாக்கியதில் இளம்பெண் பலி

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      உலகம்
Jordan Lindsey killed attack sharks 2019 06 29

நசாவ் : கரீபியன் தீவில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணை சுறாக்கள் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் டோரன்ஸ் நகரை சேர்ந்தவர் ஜோர்டன் லிண்ட்சே. கல்லூரி மாணவியான இவர் விடுமுறையை கொண்டாட தனது குடும்பத்துடன் கரீபியன் நாடுகளில் ஒன்றான பகாமாஸ் சென்றார். அங்குள்ள பிரபல சுற்றுலா தலமான ரோஸ் தீவுக்கு சென்ற ஜோர்டன் லிண்ட்சே, கடலில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழ்கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஜோர்டன் லிண்ட்சேவை 3 சுறாக்கள் தாக்கின. அவரது கால், கை உள்ளிட்ட இடங்களில் பலமாக கடித்து குதறின. இதில் அவரது வலது கை துண்டானது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த ஜோர்டன் லிண்ட்சேவை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து