முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவு - மத்திய அமை்ச்சர் தகவல்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்தியாவில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. எனவே, நீர் மேலாண்மை குறித்து சமூகத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய 'ஜல் சக்தி' துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.

புதுடில்லியில் செய்தியாளர் கூட்டத்தை அவர்  நடத்தினார். அதில் அவர் கூறியதாவது '' இந்திய அரசு, நீர் மேலாண்மை குறித்த நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளது. அதன்படி நீர் மேலாண்மை திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.

இந்தியாவில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. எனவே, நாம் மழை நீரை சேமிக்க வேண்டும். ஆறுகளை இணைப்பதன் மூலம் வீணாகும் நீரை சேமிக்க வேண்டும். தண்ணீரும் மின்சாரமும் இலவசம் என்ற நிலையை குறைப்பதன் மூலம், நீரும் மின்சாரமும் வீணடிப்பதை தடுக்க முடியும்.தண்ணீரை சேமிக்க சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் சேமித்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பாரம்பரியமான வழிமுறைகள் குறித்து ஆராயவேண்டும்.

இதற்கு விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அரசு சாரா நிறுவனங்களை இணைத்து மிகப்பெரும் அமைப்பாக செயலாற்ற வேண்டி உள்ளது. நீர் சேமிப்பிற்கு உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறைவதும், ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சங்களும் நமக்கு அபாயமணியை ஒலித்துள்ளன,'' என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து