கெய்லுக்கு ஏமாற்றமாக முடிந்த உலகக்கோப்பை

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      விளையாட்டு
Chris Gayle 2010 07 04

லண்டன் : உலகக்கோப்பையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கருதப்பட்ட கிறிஸ் கெய்லுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

அதிரடி ஆட்டம்...

உலகக்கோப்பை தொடருக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் கிறிஸ் கெய்ல் ருத்ர தாண்டவம் ஆடினார். முதல் போட்டியில் 129 பந்தில் 135 ரன்கள் குவித்தார். 2-வது போட்டியில் 63 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். 3-வது போட்டி கைவிடப்பட்டது. 4-வது போட்டியில் 97 பந்தில் 14 சிக்ஸ், 11 பவுண்டரியுடன் 162 ரன்கள் குவித்தார்.

424 ரன்கள் குவிப்பு...

ஐந்தாவது போட்டியில் 27 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தில் 113 இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 12.1 ஓவரிலேயே எட்டியது. நான்கு போட்டிகளில் 424 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தில் உலகக்கோப்பை நடைபெற்றதால் கிறிஸ் கெய்ல் ருத்ரதாண்டவம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

242 ரன்களே சேர்ப்பு...

இங்கிலாந்து தொடரின் பார்ம் உலகக்கோப்பை தொடரிலும் நீடிக்கும். இதனால் உச்சக்கட்ட புகழோடு ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்த கெய்ல், ‘‘உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்தான் என்னுடைய கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும்’’ என்றார். ஆனால் 9 போட்டிகள் கொண்ட ராபின் ரவுண்டில் கிறிஸ் கெய்லால் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. 9 போட்டிகளில் 242 ரன்களே சேர்த்தார். சராசரி 30.25 ஆகும். இரண்டு அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தனது ஓய்வு முடிவை தள்ளிப்போட்டுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து