தேசிய பாதுகாப்பு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை: சிறிசேனா

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      உலகம்
sirisena 2019 06 22

கொழும்பு : இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட அமைப்பு அழிக்கப்பட்டு விட்டதாகவும்,  தேசிய பாதுகாப்பு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொலனறுவை எனும் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா கூறியதாவது:-

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய அமைப்பு தற்போது அழிக்கப்பட்டு விட்டது. இலங்கையில் அமைதி நிலவுவதற்கான முயற்சிகள் வலிமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த கடந்த நான்கரை வருட காலங்களாக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கைக்கான அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுப்பதே தற்போது அனைவரது கடமையாக உள்ளது என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து