முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுரேனியம் செறிவூட்டல் விவகாரம்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து, அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதற்கு, ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் 3.6 சதவீதத்தை தாண்டும் என ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி அறிவித்தார். இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, 

ஈரானின் அணுசக்தி திட்டத்தின் சமீபத்திய விரிவாக்கம் மேலும் தனிமைப்படுத்தப்படுவதற்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் வழிவகுக்கும். ஈரானின் அணுசக்தி திட்டத்திற்காக. செறிவூட்டல் இல்லாத நீண்டகால தரத்தை, உலக நாடுகள் மீட்டெடுக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதங்கள் ஏந்தியிருப்பது உலகிற்கு இன்னும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பாம்பியோ எச்சரித்துள்ளார். ஆனால், 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டே அமெரிக்கா பின்வாங்கியது. இதனையடுத்தே இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து