முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரையிறுதி போட்டியில் விளையாடுவதன் மூலம் பல சாதனைகளை படைத்த டோனி

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர் : மான்செஸ்டர் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவதன் மூலம் டோனி பல வரலாற்று உலக சாதனைகளை படைத்து உள்ளார்.

இந்தியாவின் மகேந்திர சிங் டோனி, கீப்பராக தொடர்ச்சியாக 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை படைத்து உள்ளார். இலங்கையின் சங்கக்கரா 360 ஒரு நாள் போட்டிகளில் கீப்பராக விளையாடியுள்ளார். ஆனால் அவை தொடர்ச்சியாக இல்லை. அவர் ஒரு சிறப்பு பேட்ஸ்மேனாகவும்,  44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதே சமயம், டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் டோனி.

இது வரை 349 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள டோனி, அதில், 346 போட்டிகளில் இந்தியாவிற்காகவும், 3 போட்டிகள் ஆசியா XI அணிக்காகவும் விளையாடி உள்ளார். இதன் மூலம் உலகளவில் 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் 10-வது வீரர் என்ற சாதனையையும் டோனி படைத்து உள்ளார். அதிக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் டெண்டுல்கர் (463) முதலிடத்தில் உள்ளார்.  அவரை தொடர்ந்து, ஜெயவர்தனா (448), ஜெயசூர்யா (445), குமார் சங்கக்கார (404), ஷாஹித் அஃப்ரிடி (398), இன்சமாம்-உல்-ஹக் (378), ரிக்கி பாண்டிங் (375), வாசிம் அக்ரம் (356), முத்தையா முரளிதரன் (350) உள்ளனர். டோனி 349 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் அணித் தலைவராக இருந்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் ஆவார். மற்றும் அவ்வாறு செயல்பட்ட ஒரே இந்திய வீரராகவும் டோனி உருவெடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து