உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள்

புதன்கிழமை, 10 ஜூலை 2019      விளையாட்டு
jadeja action 2019 07 10

மான்செஸ்டர் : உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா அரைசதம் விளாசினார்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல்  அரையிறுதி போட்டி நேற்று முன்தினம் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.

எளிமையான இலக்கை வென்று விடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. ஆட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்களில் ரோகித் சர்மா(1), விராட் கோலி (1), லோகேஷ் ராகுல் (1) என அடுத்தடுத்து  ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து 10 -வது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களிலேயே முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் ஆகியோரும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதனால் ரசிகர்கள் நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இழந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்துள்ளனர்.  மேலும் சூறாவளியாக களமிறங்கிய ஜடேஜா  39 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 51 ரன்களை  கடந்தார்.  ரவீந்திர ஜடேஜா அதிரடி ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து