எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்க்க அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட சென்னை நதிகளை ரூ. 2,371 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சட்டசபை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுச்சுழல் சீரமைப்புத் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனை சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், இடத்திற்கு ஏற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல் மற்றும் தற்பொழுதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்த, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தும் இத்திட்டத்திற்கு சுமார் 2,371 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவான நகரமயமாதல், தொழில் மயமாக்கல் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் குடிநீர் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும். அதே வேளையில், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ச்சியாக பருவமழை பொய்த்து, நீர்வளம் குறைந்து வருகிறது. இந்த நிலையை சிறப்பாக எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்ப்பது, தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை உபயோகிப்பது, கழிவு நீர் மறு உபயோகக் குழாய் கட்டமைப்பை தெரிவு செய்வது உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கொள்கையை அம்மாவின் அரசு உருவாக்கும்.
கழிவுநீரை சுத்திகரித்துமறுபயன்பாடு
‘‘அம்மாவின் தொலைநோக்கு திட்டம் 2023″–ல், கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்வது ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கிடவும், நீர் வழங்கல் ஆதாரங்களை அதிகரிப்பதற்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின் மூலம் சுத்திகரித்து, மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். அதே போன்று, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகளில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரினை மறு சுழற்சி செய்து தொழிற்சாலைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும் சாத்தியக் கூறுகளைக் கண்டறிய, உரிய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
வெள்ளலூரில் நவீனபேருந்து நிலையம்
கோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழ்நாட்டில் 2–வது பெரிய மாநகராட்சியாகும். இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அம்மா, கோயம்புத்தூரில் ஒரு ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வெள்ளலூரில் 61.62 ஏக்கர் பரப்பளவில், 178.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மானியம் மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று நடப்பு நிதியாண்டில் இப்பேருந்து நிலையம் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா அணு ஆயுத சோதனை மேற்கொண்டது: அமெரிக்கா
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா ரகசிய அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. மேக் இந்தியா திட்டத்தை மேலும் வலுவாக்குகிறது: பிரதமர் மோடி..!
07 Feb 2026டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள் எவை?
07 Feb 2026புதுடில்லி, அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ள
-
தங்கம், விலை மீண்டும் உயர்வு
07 Feb 2026சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது.
-
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தான் அதிர்ச்சி
07 Feb 2026நியூயார்க், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்: ஜூன் வரை கெடு விதித்த அமெரிக்கா: ஜெலன்ஸ்கி
07 Feb 2026கீவ், ரஷ்யா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் வரையில் அமெரிக்கா காலக்கெடு
-
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை: டெல்லியில் ராகுல் இன்று ஆலோசனை
07 Feb 2026சென்னை, தமிழக சட்டசபையை முன்னிட்டு தி.மு.க.வுடனான கூட்டணி விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –07-02-2026
07 Feb 2026 -
கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
07 Feb 2026கோவை, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நாளை (வருகிற 9-ந் தேதி- திங்கட்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில்
-
இந்தியா மீதான 25 சதவீதம் வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.
-
டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு விரைவில் ரூ.25,000 இழப்பீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
07 Feb 2026மும்பை, டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மொத்த இழப்புத் தொகையின் 85 சதவீதம் வரை வழங்கப்படும்.
-
அ.ம.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினார் டி.டி.வி.தினகரன்
07 Feb 2026சென்னை, சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் போட்டி?
07 Feb 2026சென்னை, விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும்: மத்திய ரிசர்வ் வங்கி கணிப்பு
07 Feb 2026டெல்லி, 2025-26 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி.) 7.4 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
இனி அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
07 Feb 2026சென்னை, அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை என சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு த
-
பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டது: துணை முதல்வர்
07 Feb 2026விருதுநகர், பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையை வாய்ப்பு கிடக்க உள்ளது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை
07 Feb 2026டெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்ததால் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிக
-
தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் தமழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகழாரம்
07 Feb 2026விருதுநகர், மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றும் தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் தி.மு.க. எம்.பி.
-
ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ட்ரம்ப்..!
07 Feb 2026வாஷிங்டன், ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப், இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
-
வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா உள்பட த.வெ.க. விருப்ப மனுவில் கேட்கப்பட்ட 36 கேள்விகள்
07 Feb 2026சென்னை, வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது உள்ளிட்ட த.வெ.க. விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
-
வார ராசிபலன்
07 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
07 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
07 Feb 2026- இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி உற்சவாரம்பம். சுவாமி தங்க நந்தி வாகனம். அம்பாள் வெள்ளி அம்ச வாகனம்.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
07 Feb 2026


