எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றும் தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கல்லுக்குறிச்சி கலைஞர் திடலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.; தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உழைப்புக்கு உதாரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.
இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது வெற்றி நமதே என்பதை உறுதி செய்யக் கூடிய மாநாடு; பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் முதலமைச்சர் ஸ்டாலினுடன்தான் இருக்கிறார்கள். யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறும் துரோக கூட்டணி நமக்கு எதிராக உள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நிதி கொடுக்க மாட்டேன் என்று கூறும் துரோக கூட்டணியோடு அதி.மு.க. கைகோர்த்துள்ளது. உத்திரப்பிரதேசம், மராட்டியம், குஜராத்துக்கு அள்ளிக்கொடுக்கும் பா.ஜ.க., தமிழ்நாட்டுக்கு கிள்ளிகூட கொடுப்பதில்லை.
துரோகத்தோடுதான் கைகோர்த்து ஒரு கூட்டணி நமக்கு எதிராக இருக்கிறது. இந்தியை ஏற்றால்கொண்டால்தான் நிதி கொடுப்போம் என்று கல்வி நிதியை பா.ஜ.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது. 100 நாள் வேலை திட்ட பெயரை மட்டும் மாற்றவில்லை பா.ஜ.க., அத்திட்டத்தையே ஒழிக்கும் செயலை பா.ஜ.க. செய்துள்ளது. அராஜக கூட்டத்தோடு அதி.மு.க. கைகோர்த்துள்ளது. அமெரிக்கா உமியை கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிட போகிறது. பாராளுமன்ற வரலாற்றிலேயே பிரதமரின் உரையின்றி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம். பா.ஜ.க. அரசின் அராஜக ஆட்சியின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


