முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும் - சித்தராமையா திட்டவட்டம்

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-

நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். மக்கள் சேவையாற்ற யாரும் என்னை அழைக்கவில்லை. நானே அரசியலுக்கு வந்து மக்கள் சேவையாற்றுகிறேன். அழுது கொண்டே மக்கள் சேவை செய்யக்கூடாது. எப்போதும் மகிழ்ச்சியுடனேயே ஆட்சியை நடத்த வேண்டும். ஆபரேஷன் மீது (மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுப்பது) எனக்கு நம்பிக்கை இல்லை.  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக குமாரசாமி அறிவித்துள்ளார். நாங்கள் ஆழமாக விவாதித்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளோம். ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வை நாங்கள் இடைநீக்கம் செய்துள்ளோம். ராமலிங்கரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு குறைவாக இருப்பதாக சொல்கிறீர்கள். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாருங்கள். எங்களுக்கு எந்த ஆபரேஷன் பயமும் இல்லை. எங்கள் கட்சியில் இருந்த கருப்பு ஆடுகள் ஓடிவிட்டன. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ரெசார்ட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது எடியூரப்பாவுக்கு நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது. இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறும் எடியூரப்பா, நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டியது தானே?.அவர் ஏன் பயப்படுகிறார். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து