முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனித்திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. 

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 8-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா வருதல், இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சி, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நேற்று காலை நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.  நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தந்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து