வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடிப்பு: மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      இந்தியா
Heavy-rain-and-floods-in manimpr himalaya 2019 07 15

கவுகாத்தி : அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். அஸ்ஸாமில் மழை, வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 11-ஆக அதிகரித்துவிட்டது. அஸ்ஸாமில் 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாரபெட்டா மாவட்டம் மிகவும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு 7.35 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்து மோரிகான் மாவட்டத்தில் 3.50 லட்சம் பேர் வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த சில நாள்களுக்கு அஸ்ஸாமில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பிரம்மபுத்திராவில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. காண்டாமிருகங்கள் அதிகம் வசிக்கும் காஜிரங்கா வன விலங்குகள் சரணாலயத்தின் 70 சதவீத வனப்பகுதி நீரில் மூழ்கிவிட்டது. இதேபோல திரிபுரா உள்ளிட்ட பிற வடகிழக்கு மாநிலங்களும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து