இமாச்சல், குஜராத் மாநில கவர்னர்கள் மாற்றம்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      இந்தியா
Himachal-Gujarat Governors Transition 2019 07 15

புது டெல்லி : குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் கவர்னர்களை மாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் கவர்னராக இருந்த ஓம் பிரகாஷ் கோலி அப்பதவியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். அவரது இடத்தில் இமாச்சல பிரதேசம் மாநில கவர்னராக இருந்த ஆச்சாரியா தேவ் விராட் நியமிக்கப்பட்டுள்ளார்.  இமாச்சல பிரதேசம் மாநிலத்தின் புதிய கவர்னராக மத்திய முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து