ஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      உலகம்
Hafeez Saeed 2019 07 13

இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், ஜமாத் - உத் - தாவா பயங்கரவாத அமைப்பின் (ஜே.யூ.டி) தலைவருமான ஹபீஸ் சயீது மற்றும் அவரது உதவியாளர்கள் 3 பேருக்கு, பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு சொந்தமான கல்லூரி, சட்ட விரோதமாக நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.

பாகிஸ்தானில் ஜே.யூ.டி. அமைப்புக்கு தொடர்புடையவர்களால் 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பதிப்பகம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை நடத்தப்பட்டு வந்தது. இதில் பல கல்வி நிறுவனங்கள் சட்ட விரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்ச் மாதத்தில், பஞ்சாப் காவல்துறையினர் 160 கல்லூரிகள், 32 பள்ளிகள், இரண்டு கல்லூரிகள், நான்கு மருத்துவமனைகள், 178 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஜேயூடியுடன் தொடர்புடைய 153 மருந்தகங்கள் மற்றும் பலா - இ - இன்சானியத் அறக்கட்டளை ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தெற்கு சிந்து மாகாணத்தில், ஜேயூடி மற்றும் எப்.ஐ.எப். நடத்தி வந்த 56 கல்வி நிறுவனங்களும் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டன.

இந்த வழக்கு லாகூரில் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. சயீது மற்றும் அவரது உதவியாளர்களான ஹபீஸ் மசூத், அமீர் ஹம்சா மற்றும் மாலிக் ஜாபர் ஆகியோருக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியும், தலா ரூ .50,000 வீதம் செலுத்தக் கோரி ஜாமீன் வழங்கப்பட்டதாக அந்நாட்டின் டான் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, சயீதின் வழக்குரைஞர் கூறுகையில், ஜே.யூ.டி. எந்தவொரு நிலத்தையும், சட்ட விரோதமாக பயன்படுத்தவில்லை என்பதால் ஜாமீன் மனுவை ஏற்கும்படி நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து