முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜினாமா விவகாரம்: கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இன்று காலை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி  : கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் சமீபத்தில் ராஜினமா செய்தனர். ஆனால், தற்போது வரையில் அது குறித்து கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார்  முடிவெடுக்கவில்லை. இதனால், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அங்கிருந்து முதலில் 10 பேரும், பின்னர் 5 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதில், தங்களது ராஜினமா குறித்து சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்தனர். இதன்மீது கடந்த வாரம் முதலில் சபாநாயகர் உரிய முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால், கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், சபாநாயகர் முடிவெடுக்கும் விசயத்தில் கோர்ட் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வரையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து முடிவெடுக்க தடை விதித்த சுப்ரீம் கோர்ட், நேற்று அந்த வழக்கை விசாரிப்பதாக உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று அந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அதிருப்தியாளர்கள் சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி, கர்நாடக சபாநாயகர் ஒரே நேரத்தில் ராஜினாமா ஏற்பு, தகுதி நீக்கம் என்று இருவித நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இது தவறு என்று வாதாடினார்.  இந்த விசாரணையில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சபாநாகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த கோகாய், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சபாநாயகர் என்று இருதரப்பினருக்கும் பாதகமில்லாத வகையில் தான் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் நாளை 17-ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து