முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான்கள் - ராணுவம் மோதல்: ஆப்கானிஸ்தானில் 76 பேர் பலி

புதன்கிழமை, 17 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் ராணுவத்தினர் இடையிலான மோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலியாகினர்.

தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் போராடி வருகின்றன. அதே சமயம் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இணைந்து தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றன.

பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் அதே வேளையில் தலிபான்களின் பயங்கரவாத தாக்குதல்களும், ராணுவத்தின் பதிலடி தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான இந்த மோதலில் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகிறார்கள். இந்த நிலையில் உருஸ்கான் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நள்ளிரவில் அரசுபடைகள் வான்தாக்குதல் நடத்திய போது, பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் குண்டுகள் விழுந்தன. இதில் பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

அதே போல் காந்தகார் மாகாணத்தில் உள்ள காக்ரெஸ் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே அதே மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ் ஒன்று சாலையோரம் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி, வெடித்து சிதறியதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இப்படி அரசு படைகளின் வான்தாக்குதலிலும், பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் சிக்கியும் 24 மணி நேரத்தில் மட்டும் அப்பாவி மக்கள் 76 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு சம்பவங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள அதிபர் அஷ்ரப் கனி, உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து