பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்ப மாட்டேன்: பிரியங்கா திட்டவட்டம்

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      இந்தியா
Priyanka Gandhi 2019 06 13

மிர்சாபூர் : பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்ப மாட்டேன் என பிரியங்கா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா கிராமத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஊர் தலைவர் யக்யா தத், அவரது சகோதரர் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் (வருவாய்) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த விவகாரத்தில் ஆர்.டி.ஓ. மற்றும் 4 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் அறிவித்தார்.

இந்தநிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்காகாந்தி, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பார்த்து ஆறுதல் கூற விரும்பினார். இதற்காக அவர் நேற்று முன்தினம் உத்தரபிரதேசம் சென்றார். முதலில் வாரணாசி சென்ற பிரியங்கா காந்தி அவர், சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து சோன்பத்ராவுக்கு அவர் புறப்பட்டார். ஆனால் அவரை வாரணாசி-மிர்சாப்பூர் எல்லையில் உள்ள நாராயண்பூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

உடனே அவர் அங்கேயே நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சுற்றிலும் காங்கிரஸ் தொண்டர்களும், பாதுகாப்பு படையினரும் சூழ்ந்தனர். இதனால் பெரும் பதற்றம் உருவானது. பிரியங்கா காந்தியை போலீசார் அருகில் உள்ள சுனார் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர். அங்கு பிரியங்கா காந்தியை காவல்துறை மூத்த அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்பிச்செல்ல மாட்டேன் என்று பிரியங்கா காந்தி திட்டவட்டமாக கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து