எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : சேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி இந்த ஆண்டே துவக்கப்படும் என்றும், போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன் டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- சம்பா சாகுபடிக்கு எப்பொழுது தண்ணீர் திறக்கப்படும்?
பதில்:- 90 அடி உயரத்திற்கு தண்ணீர் இருக்கும் பொழுது திறந்தால் தான் விவசாயிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும். இப்பொழுது உடனே திறந்தால், இடையில் தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டால் விளைச்சல் முதிர்ச்சி பெறுகின்றபொழுது பயிர்கள் பதராகப் போய் விடும். கடந்த காலத்தில், இரண்டு வருடத்திற்கு முன்பு 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பதராகப் போய் விட்டது. அப்பொழுது நாம் கர்நாடகாவிடம் 3 டி.எம்.சி. தண்ணீர் கொடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டபொழுதும் கொடுக்கவில்லை. இரண்டாண்டுகள் இதுபோன்ற நிலைமையை நாம் சந்தித்தோம். அதனால், போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன் டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்பொழுது, கேரளாவிலும், குடகுவிலும் மழை அதிக அளவில் பொழிந்து கொண்டிருப்பதினால், கர்நாடக அணைக்கு தண்ணீர் வருகின்ற பொழுது தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீர் முழுவதும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து பாடுபட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்வதற்குண்டான நீரை திறந்து விடப்படும்.
கேள்வி:- கர்நாடகா முதல்வரிடம் கூடுதலாக தண்ணீர் கேட்க வாய்ப்பிருக்கின்றதா?
பதில்:- தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காமல் இருக்கின்ற பொழுது கூடுதலாக எப்படிக் கேட்க முடியும்? கொடுத்தால் சந்தோஷம் தான். தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர் கிடைத்தாலே போதும்.
கேள்வி:- ஆடி 18-க்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- நீர் வருவதை வைத்துத் தான் திறந்துவிட முடியும்.
கேள்வி:- விரைவுச் சாலை திட்டம்...
பதில்:- இன்று காலையில் தமிழ்நாடு கிராம வங்கி விழாவின்போதுகூட, கிட்டத்தட்ட 70 விவசாயிகள், எங்களுடைய நிலத்தை எடுத்துக்கொண்டு எங்களுக்கு வேலைவாய்ப்பு மட்டும் கொடுங்கள். விரைவுச் சாலை வந்தால் நல்லது என்று மனு கொடுத்தார்கள். விரைவுச் சாலையை பலர் விரும்புகின்றார்கள். சிலர் வெறுக்கின்றார்கள். விரைவுச் சாலை சேலத்திற்கு மட்டுமல்ல, நாமக்கல், கரூர், மதுரை என்று கேரளா வரைக்கும் செல்கின்றது. இது மத்திய அரசின் மிக முக்கியமான திட்டம், முழுக்க, முழுக்க மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்படுகிறது. ஊடகத்தினரும் பலமுறை இதுகுறித்து கேட்டுவிட்டீர்கள். தமிழக அரசுக்கு, யாரையும் வற்புறுத்தியோ, மன சங்கடத்திற்கு உள்ளாக்கியோ நிலத்தை பெறவேண்டுமென்ற எண்ணம் ஒரு சதவிகிதம் கூட கிடையாது. சேலத்தில் தொப்பூர் முதல் ஓமலூர் வரை எத்தனை உயிர்ப்பலி ஏற்படுகின்றது? அதிக வாகனப் பெருக்கம் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகளை மாற்றி இன்றைய தேவைக்கேற்ற சாலைகளை அமைப்பது தான் அரசின் கடமை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மத்தியில் இருந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 734 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகளை விரிவுபடுத்தி பல்வேறு இடங்களில் புறவழிச் சாலை அமைத்தனர். தற்பொழுது அதைவிடவும் கூடுதலான சாலை தேவைப்படுகின்றது. அப்பொழுது 100 வாகனமென்றால் தற்பொழுது 400 வாகனமாக பெருகி 300 மடங்கு அதிகமாகிவிட்டது. இந்த 300 மடங்கு அதிகமான வாகனம் செல்வதற்கு பழைய சாலைகளை மாற்றி அமைக்க வேண்டுமல்லவா? மேலும், இந்தச் சாலைகளை நவீன முறையில், விபத்தில்லாமல் இருப்பதற்கான முறையில் அமைக்கவிருக்கின்றார்கள். இதனால், கிட்டத்தட்ட 60, 70 கிலோமீட்டர் பயண தூரம் குறைகின்றது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகின்றது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நிலம் கையகப்படுத்தும்பொழுது அதில் அமைந்துள்ள வீட்டிற்கு உண்டான கழிவுத் தொகைக்கான பணத்தைத்தான் வழங்கினார்கள். இப்பொழுது கழிவுத் தொகை இல்லாமலேயே பணம் வழங்குகின்றனர். அதேபோல, தென்னை மரத்திற்கு கிட்டத்தட்ட ரூபாய் 30 ஆயிரம், ரூபாய் 40 ஆயிரம் வழங்குகின்றார்கள். எனவே, எந்தவிதத்திலும் யாருக்கும் நஷ்டம் ஏற்படாவண்ணம் வழங்க வேண்டுமென்று நாங்கள் மத்திய அரசை கேட்டிருக்கின்றோம்.
நம்முடைய பகுதி வளர்ந்து வருகின்ற ஒரு பகுதியாக உள்ளதாலும், புதிய கல்லூரிகளை அதிகமாக திறந்து கொண்டிருப்பதாலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியுள்ளதாலும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அதற்கு நல்ல சாலை வசதி தேவையல்லவா? உள்கட்டமைப்பை ஏற்படுத்தினால் தான் தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு, நம்முடைய மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மக்களின் நலன், ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தான் நாங்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாக நெல்லை, கோவையில் பலரை கைது செய்திருக்கின்றார்கள். தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?
பதில்:- தீவிரவாதத்தைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குக்கூட தமிழக உளவுத் துறை எச்சரிக்கை கொடுத்தது. அதை அவர்கள் சரியாக பொருட்படுத்தவில்லை. தமிழகத்தின் உளவுத் துறை சரியான நேரத்தில், சரியான தகவலை மத்திய அரசிற்கு கொடுத்து இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு, மத்திய அரசிற்கு துணை நிற்கின்றது.
கேள்வி:- அதிமுக-வின் உண்மையான தொண்டர்கள் தி.மு.க.-விற்கு வந்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் சொல்லியிருக்கின்றாரே?
பதில்:- உங்களுக்குத் தெரியுமா? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு உறுப்பினரையும் தொட்டுப் பார்க்க முடியாது. அனைவரும் எம்.ஜி.ஆர் வழியிலே வந்து, அம்மா வழியிலே நின்று, இன்று இருபெரும் தலைவர்களின் ஆட்சியும், கட்சியும் நிலைத்து நிற்க வேண்டுமென்று உள்மனதோடு, மனமகிழ்ச்சியோடு எங்களோடு இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காணும் கனவு, எந்தக் காலத்திலும் நனவாகாது. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று நினைத்தார்கள், நீங்களும் பலமுறை என்னிடம் கேள்வி கேட்டீர்கள். அதற்குண்டான பதிலையும் பலமுறை சொல்லி விட்டேன். இப்பொழுது இரண்டாண்டு முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். 2021-லும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் அமையும்.
கேள்வி:- அ.ம.மு.க. நிர்வாகிகளை இழுப்பதற்கு நீங்கள் பணம் மற்றும் டெண்டர் தருவதாக சொல்லியிருப்பதாகவும், அதற்கான ஆடியோவை வெளியிடுவதாகவும் தினகரன் சொல்லியிருக்கின்றாரே?
பதில்:- ஆடியோ வெளியிடட்டும், நாங்களும் தயாராக இருக்கின்றோம். அவர் ஏதாவதொரு டூப் விட்டுக் கொண்டு தான் இருப்பார். எல்லோரும் எங்களிடம் வந்துவிட்டார்கள் அல்லவா? எல்லோரும் வந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா? அ.ம.மு.க.-விற்குச் சென்றவர்கள் எல்லாம் சாரை, சாரையாக இன்று தாய்க் கழகத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரும் இப்பொழுது எங்களுடன் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். முழு ஒத்துழைப்பையும் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். அதேபோல, மாநிலம் முழுவதும் அ.ம.மு.க.-வில் இருப்பவர்கள் தாய்க் கழகத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள். இன்று அ.தி.மு.க. பலம் பொருந்திய இயக்கமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. சேலத்தில் அரசின் சார்பாக புதிய அரசு சட்டக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டே துவக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.


