முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு விருது - டெல்லியில் பிரதமர் மோடி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : இந்தியாவில் புலிகள் அதிகம் வாழும் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திற்கு மத்திய அரசு விருதை பிரதமர் மோடி புதுடெல்லியில் வழங்கினார்.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் 1400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடந்த 2008-ம் ஆண்டில் வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது . இங்கு புலிகள் இருப்பதை அறிந்து 2013-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக மேம்படுத்தப்பட்டது நிர்வாக வசதிக்காகவும் வனப்பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இரண்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டது. புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 32 வேட்டை தடுப்பு முகாமகள் செயல்பட்டு வருகின்றன.

மக்கள் தொகை நிறைந்த இப்புலிகள் காப்பகத்தின்  மையப்பகுதியில் 28 கிராமங்களும்ஸ எல்லையோரங்களில் 272 கிராமங்களும் அமைந்துள்ளன. மக்களின் தேவைகளுக்காக வனத்தை சார்ந்து வாழும் அனைத்து கிராமங்களிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள  குடும்பத்தினருக்கு அடுப்புடன் கூடிய இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் புலிக்குட்டீஸ் என்ற பெயரில் இலவச மாலை நேர சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் வனப்பாதுகாப்பில் வனத்தை சார்ந்து வாழும் கிராம இளைஞர்களுக்கு வேட்டை தடுப்பு காவலர்களாக வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படியும் 4-ம் கட்ட மேலாண்மை திறன் மதிப்பாய்வின் அடிப்படையிலும் ஆண்டுக்கு 30 விழுக்காட்டிற்கு மேல் புலிகள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள புலிகள் இருக்கும் வனப்பகுதிகளில் இது அதிகமானதாகும் என்பதால் மத்திய அரசும் தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பும் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தை அங்கீகரித்து விருது வழங்கியுள்ளது. இதற்கான விழா டெல்லியில் உலக புலிகள் தின விழாவாக நடத்தப்பட்டது. இதில் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் முனைவர் நாகநாதன் விருதை பெற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து