முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணக்கில் ரூ. 15 லட்சம் முதலீடு: வதந்தியை நம்பி மூணாறு தபால் நிலையத்தில் குவிந்த மக்கள்

புதன்கிழமை, 31 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் அவர்கள் கணக்கில் மத்திய அரசு ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் என்று பரவிய வதந்தியை நம்பி மூணாறு தபால் நிலையத்தில் பொதுமக்கள் குவிய தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் உள்ள மூணாறு பகுதியில் ஒரு வதந்தி பரவியது. தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் அவர்கள் கணக்கில் மத்திய அரசு ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் என்று பரவிய வதந்தியை நம்பி மூணாறு தபால் நிலையத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல ஆண்களும், பெண்களும் திரண்டதால் தபால் ஊழியர்கள் திணறத் தொடங்கினர். ரூ.15 லட்சம் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்பது வதந்தி என்று தபால் ஊழியர்கள் எடுத்துக் கூறினாலும் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. பல மணி நேரம் காத்திருந்து சேமிப்பு கணக்கை தொடங்கிய பிறகே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு காலை முதல் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தபால் ஊழியர் ஒருவர் கூறும் போது, ரூ.100 பணம் டெபாசிட் செய்து பொதுமக்கள் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கினால் கியூ.ஆர். கோடு இடம் பெற்ற ஸ்மாட் கார்டு அவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.ஒரு லட்சம் வரை தங்கள் கணக்கில் பொதுமக்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம். இதைத் தான் தவறுதலாக பொதுமக்கள் புரிந்து கொண்டு வதந்தியை நம்பி கணக்கு தொடங்கி உள்ளனர் என்றார். இதேபோல மூணாறு அருகே உள்ள தேவிக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்தால் இலவச வீடு, நிலம் வழங்கப்படும் என்றும் வதந்தி பரவியது. இதை நம்பியும் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து