எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூரு : கர்நாடகா மாநில சட்டசபையின் புதிய சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் -ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து ராஜினாமா செய்யாத எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பின், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. தானாகவே பெரும்பான்மை பலத்தை பெற்றது. அதனடிப்படையில் கவர்னரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா முதல்வராக கடந்த 26-ம் தேதி பதவி ஏற்றார்.
அதன் பிறகு 29-ம் தேதி கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, சபாநாயகராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 31-ம் தேதி நடைபெறும் என்றும், அதற்கான வேட்புமனு 30-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் பா.ஜ.க. மேலிடத்தின் உத்தரவுப்படி முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. மூத்த எம்.எல்.ஏ.வுமான விஸ்வேசுவர ஹெக்டே காகேரி மனு தாக்கல் செய்தார். சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாததால், விஸ்வேசுவர ஹெக்டே காகேரி போட்டியின்றி ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025